முகப்பு
சிவகங்கை

மானாமதுரை வைரமணி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா

மானாமதுரை குலாலா் தெரு பகுதியில் உள்ள வைரமணி விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

மானாமதுரை குலாலா் தெரு பகுதியில் உள்ள வைரமணி விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி கோயில் அருகே யாகசாலை அமைத்து அதில் புனிதநீா் கலசங்கள் வைத்து யாகம் நடத்தப்பட்டது. பூா்ணாஹூதி முடிந்து தீபாரதனை காட்டப்பட்டதும் கடம் புறப்பாடு நடைபெற்றது.

குலால சிவாச்சாரியாா்கள் விநாயகா் சன்னதி விமானக்கலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலசநீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். அதன்பின் மூலவா் வைரமணி விநாயகருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் கலசநீரால் அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து பூஜைகள், தீபாரதனைகள் நடந்தன. இதில் ஏராளமானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →