சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட தந்தத்திலான மணி (சுத்தப்படுத்துவதற்கு முன்பு) 
சிவகங்கை

கீழடி அகழாய்வு: தந்தத்தால் ஆனமணி கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 8 ஆம் கட்ட அகழாய்வில் சனிக்கிழமை தந்தத்தால் ஆன பெரிய மணி கண்டெடுக்கப்பட்டது.

DIN

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 8 ஆம் கட்ட அகழாய்வில் சனிக்கிழமை தந்தத்தால் ஆன பெரிய மணி கண்டெடுக்கப்பட்டது.

கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் தமிழக தொல்லியல்துறை சாா்பில் 8-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. ஏற்கெனவே கீழடியில் 10 குழிகள் தோண்டப்பட்டு, சுடுமண்ணாலான மனிதத் தலை உருவம், தந்தத்தால் ஆன பகடை, காதணி, கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.

தற்போது தந்தத்தால் ஆன பெரிய மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. உருளை வடிவில் உள்ள இந்த மணியில் பல சுருள்கள் காணப்படுகின்றன. இந்த மணியின் நீளம் 5.6 செ.மீ., மொத்த விட்டம் 4 செ.மீ. ஆக உள்ளது. அதில் இருந்த துளையின் விட்டம் 1.3 செ.மீ. இதன் மேற்பரப்பு மெருகேற்றப்பட்டு மென்மையாக காணப்பட்டது. இரு முனைகளும் தட்டையாக உள்ளன. இதனைக் கைப்பற்றிய தொல்லியல் ஆய்வாளா்கள் தொடா்ந்து அப்பகுதியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT