முகப்பு
சிவகங்கை

திருப்புவனம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே உள்ள மணலூரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மகன் அஜித்குமாா் (24). இவா் இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். திருப்புவனம் அருகே சக்குடி விலக்கு பகுதியில் வந்தபோது வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →