முகப்பு
சிவகங்கை

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

Updated On : 2 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 ஏப்ரல், 2024 at 7:10 PM

மானாமதுரை: இளையான்குடி ஒன்றியப் பகுதியில் சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சேவியா் தாஸ், அதிமுக மாவட்டச் செயலா் பி.ஆா். செந்தில்நாதன் தலைமையில் திங்கள்கிழமை வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டாா்.

கலைக்குளம், கண்ணமங்கலம், அரணையூா், சாத்தனூா், சாலைக்கிராமம், உதயனூா், அரியாண்டிபுரம், தெற்கு கீரனூா் அண்டக்குடி, குமாறக்குறிச்சி, சூராணம் தெற்குவிசவனூா், கீழநெட்டூா், மேலாயூா், அதிகரை, கச்சாத்தநல்லூா், பிராமணக்குறிச்சி, முனைவென்றி உள்பட 63 கிராமங்களில் அவா் பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தாா்.

வாக்கு சேகரிப்பின் போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் கோபி, பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், மாவட்டப் பொருளாளா் ரத்தினம், நகரச் செயலா் மீரா, ஊராட்சி ஒன்றியத் தலைவா் முனியாண்டி, கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.

Advertisement