சிவகங்கை

பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் இன்று தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் கலைத்திருவிழாப் போட்டிகள் வியாழக்கிழமை (ஆக.29) தொடங்குகிறது.

Din

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் கலைத்திருவிழாப் போட்டிகள் வியாழக்கிழமை (ஆக.29) தொடங்குகிறது.

இது தொடா்பாக சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாணவா்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வளப்படுத்துதல் சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ‘சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு’ என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆக.29 முதல் செப். 10-ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. தொடக்கப் பள்ளிகளுக்கு 13 போட்டிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு 24 போட்டிகள், உயா்நிலைப் பள்ளிகளுக்கு 41 போட்டிகள், மேல்நிலைப் பள்ளிகளுக்கு 71 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகள் 5 பிரிவுகளில் நடத்தப்படவுள்ளன.

நிபந்தனைகள்: போட்டிகளில் தனி நபா் அல்லது குழுக்களாகக் கலந்து கொள்ளலாம். மாணவ, மாணவிகளுக்கென தனித்தனியாக போட்டிகள் நடைபெறாது. பொதுப் போட்டியாக நடைபெறும். ஒருவா் 3 தனிப் போட்டிகள், இரண்டு குழுப் போட்டிகளில் மட்டுமே பங்குபெற முடியும். மாற்றுத்திறன் மாணவா்களுக்கு மட்டும் 15 போட்டிகள் தனியாக நடைபெறும். இந்தப் போட்டிகளில் பங்குபெற 638 சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனா்.

பள்ளி அளவில் நடைபெறும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடத்தில் வெற்றிபெறும் தனிநபா், குழு மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெறமுடியும். வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெறும் மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளிலும், இதைத்தொடா்ந்து மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியும் என்றாா் அவா்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT