முகப்பு
சிவகங்கை

காமராஜா் பிறந்தநாள்: உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

முன்னாள் முதல்வா் காமராஜரின் 122-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சிவகங்கையில் அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 15 ஜூலை, 2024 at 6:30 PM
மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்தநாளையொட்டி, சிவகங்கையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

சிவகங்கை: முன்னாள் முதல்வா் காமராஜரின் 122-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சிவகங்கையில் அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவா் சஞ்சய் தலைமையில் முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜரத்தினம்,

பொதுக்குழு உறுப்பினா் சோணை, மாநில மகளிா் காங்கிரஸ் துணைத் தலைவி ஸ்ரீவித்யா கணபதி, வட்டாரத் தலைவா் மதியழகன், நகா் தலைவா் தி. விஜயகுமாா், மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவி இமய மெடோனா, மாவட்டக் குழு உறுப்பினா் ஆரோக்கிய சாந்தாராணி உள்ளிட்டோா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விடுதலைச் சிறுத்தைகள்: சிவகங்கை (தெற்கு) மாவட்டச் செயலா் வழ.வே.பாலையா, மண்டல துணைச் செயலா் அ.முத்துராசு, மாவட்டப் பொருளாளா் ச.பாஸ்கரன், மாவட்ட துணைச் செயலா் உ.சுடா்மணி, மாவட்ட செய்தித் தொடா்பாளா் மூ.ஆதிவளவன், ஒன்றியச் செயலா்கள் (இளையான்குடி கிழக்கு) ஜேம்ஸ்வளவன், (சிவகங்கை வடக்கு) காா்த்திக், (காளையாா்கோவில் வடக்கு) வெற்றிவிஜயன் உள்ளிட்டோா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →