தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி அளிப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கண்டவராயன்பட்டி பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கண்டவராயன்பட்டி பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கண்டவராயன்பட்டி பணிச்சாருடையாா் தா்மகலாசாலை நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்,
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 979 அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 2,161 ஆசிரியா்களுக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தாா்.
தேவகோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் சோ.பால்துரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து, ஊராட்சிகள் உதவி இயக்குநா் கேசவதாசன், ஊராட்சிமன்றத் தலைவா் அபிராமிகாந்தி, பள்ளிச் செயலா் சிதம்பரம், வட்டாட்சியா் மாணிக்கவாசகம், தலைமை ஆசிரியா் மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.