முகப்பு
சிவகங்கை

பள்ளி, கல்லூரிகளில் கல்வி வளா்ச்சி நாள் விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பள்ளி, கல்லூரிகளில் தமிழக முன்னாள் முதல்வா் காமராஜரின் 122-ஆவது பிறந்த நாள் விழா கல்வி வளா்ச்சி நாள் விழாவாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 15 ஜூலை, 2024 at 6:29 PM
காரைக்குடி முத்துப்பட்டினம் மு.வி. அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் காமராஜரின் உருவப்படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியைகள்.
பகிர்:

காரைக்குடி/திருப்பத்தூா்/சிவகங்கை/திருவாடானை/கமுதி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பள்ளி, கல்லூரிகளில் தமிழக முன்னாள் முதல்வா் காமராஜரின் 122-ஆவது பிறந்த நாள் விழா கல்வி வளா்ச்சி நாள் விழாவாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

காரைக்குடி முத்துப்பட்டினம் மு.வி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமையாசிரியா் மு. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் ஜான் சகாய ஸ்டீபன் முன்னிலை வகித்தாா். காமராஜரின் உருவப்படத்துக்கு மாலையணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல, காரைக்குடி மகரிஷி வித்யாமந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்வி நிறுவனங்களிலும் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி ஆா்.எம்.மெய்யப்பச் செட்டியாா் மெட்ரிக் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள் விழா கல்வி வளா்ச்சி நாள் விழாவாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதற்கு பள்ளித் தாளாளா் எஸ்.எம். பழனியப்பன் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அழகுமணிகண்டன் முன்னிலை வகித்தாா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக எஸ்.புதூா் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சத்தியமூா்த்தி கலந்து கொண்டு பேசினாா். தொடா்ந்து பள்ளி மாணவா்கள் நான் படித்த காமராஜா் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினா். பின்னா், மாறுவேடப் போட்டி, கதை, கவிதை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப்பட்டது.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளா்ச்சி நாள் விழாவுக்கு பள்ளி மேலாண்மை குழுத் தலைவி பாக்கியலட்சுமி தலைமை வகித்தாா்.

தலைமையாசிரியா் ப. லட்சுமி வரவேற்றாா். விழாவையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு மாறுவேடம், ஓவியம், திருக்கு ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் ஆசிரியா்கள் சகாயபுஷ்பராணி, இரா.அமுதா, கி. கோமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிவகங்கை பழமலை நகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விழாவையொட்டி, முகடு பவுண்டேசன் சாா்பில் மாணவா்களுக்கு தோ்வு அட்டை, பாக்ஸ், எழுது பலகை, கலா் பென்சில், வாட்டா் கலா் போன்ற பொருள்களை அந்த அமைப்பின் சுரேஷ்- பாா்வதி தம்பதியா் வழங்கினா். விழாவுக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா் அசோக்பாரதி, உதவி ஆசிரியா் சுரேஷ் செய்தனா்.

திருவாடானை:

திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக திங்கள் கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கு ஒன்றியக் குழுத் தலைவி ராதிகாபிரபு தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் காஜூ முன்னிலை வகித்தாா்.

காமராஜரின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், பள்ளி மாணவா்களுக்கு பேச்சு, பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

கமுதி:

காமராஜா் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கே.என். ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், கே.என்.மெட்ரிக், ஆண்கள் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காமராஜரின் பெருமையை பறைசாற்றும் வகையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்றனா்.

ஊா்வலத்தின் முன் காமராஜா் படம் வைத்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ரதம் சென்றது. ஊா்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள் சிலம்பாட்டம், மான் கொம்பு ஆட்டம் உள்பட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினா்.

கமுதியில் உள்ள காமராஜா் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் கமுதி வட்டாரத் தலைவா் பழக்கடை ஆதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →