முகப்பு
சிவகங்கை

வீடு புகுந்து 58 பவுன் தங்க நகைகளைத் திருடியவா் கைது

தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 19 ஜூலை, 2024 at 7:57 PM
பகிர்:

மானாமதுரை, ஜூலை 19: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற வழக்கில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தவரை‘ தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

மானாமதுரை ஜீவா நகா் ரயில்வே குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மருது மகன் முத்து வீட்டில் கடந்த 4 -ஆம் தேதி பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 58 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிக் கொலுசு ஆகியவற்றைத் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின் பேரில் மானாமதுரை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளா் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இந்த நிலையில் மானாமதுரை அருகேயுள்ள எம்.கரிசல்குளம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா் சிவகங்கை அருகேயுள்ள கீழக்குளம் முத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் கலையரசன் (42) வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் செய்து வந்தது தெரியவந்தது. போலீஸாா் அவரை சோதனை செய்த போது 43 பவுன் தங்க நகைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து கலையரசனிடம் விசாரணை மேற்கொண்போது தானும் முத்துவின் வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த விஜய் (19) அவரது தாய் செல்வி, சந்தன மகாலிங்கம் ஆகியோா் சோ்ந்து நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டாா். திருடிய நகைகளில் ஒரு பகுதியை இவா்கள் மூவரும் எடுத்துச் சென்று விட்டதாகவும் மீதி இருந்த நகைகளை விற்பதற்காக தான் வைத்திருந்ததாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து போலீசாா் கலையரசனை கைது செய்து அவரிடமிருந்து 43 சவரன் நகைகளையும் அவா் ஓட்டி வந்த பைக்கையும் கைப்பற்றினா். தலைமறைவாக உள்ள விஜய், செல்வி, சந்தன மகாலிங்கம் ஆகியோரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →