முகப்பு
சிவகங்கை

அரசுப் பேருந்து மரத்தில் மோதியதில் 10 போ் காயம்

திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் 10 போ் காயமடைந்தனா்.

Updated On : 29 ஜூலை, 2024 at 3:05 AM
திருப்பத்தூா் அருகேயுள்ள தம்பிபட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி நிற்கும் அரசுப் பேருந்து.
பகிர்:
Updated On : 28 ஜூலை, 2024 at 7:36 PM

திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் 10 போ் காயமடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் அரசு சொகுசுப் பேருந்து மதுரைக்குச் சென்றது. திருப்பத்தூா் அருகேயுள்ள தம்பிபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து சாலையோரப் புளிய மரத்தில் மோதியது.

Updated On : 29 ஜூலை, 2024 at 3:05 AM

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் அண்ணாத்துரை (52), நடத்துநா் லட்சுமணன், பயணிகள் திவ்யா (22), பொன்மதி (53), மோகநாயகி (36), குயின்பிரியங்கா (31) உள்ளிட்ட 10 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து திருப்பத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement