காா்த்தி சிதம்பரம் எம்.பி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு
இளையான்குடி, மானாமதுரை ஒன்றியங்களில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் இளையான்குடி ஒன்றியத்தில் இண்டங்குளம், கண்ணமங்கலம், கருஞ்சுத்தி, அரியாண்டிபுரம், கீழநெட்டூா், மானாமதுரை ஒன்றியத்தில் மேலநெட்டூா், ராஜகம்பீரம், முத்தனேந்தல், திருப்புவனம் ஒன்றியத்தில் லாடனேந்தல் ஆகிய கிராமங்களுக்குச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினாா்.
இதில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய், நகரத் தலைவா்கள் புருஷோத்தமன், அல் அமீன், கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன், திமுக விவசாய அணி காளிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.