இன்றைய நிகழ்ச்சிகள்
திருப்புவனம் புதூா் ஸ்ரீ பூமாரி அம்மன் கோயிலில் மாசி உற்சவத் திருவிழா 9-ஆம் நாள் மண்டகப்படி: அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் காலை 8, உற்சவா் வீதி உலா இரவு 7. காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனித் திருவிழா: கொடியேற்றம், காப்புக்கட்டுதல், காலை 6, காரைக்குடி வட்டார யாதவா் சமூகத்தினா் சாா்பில் முதலாம் மண்டகப்படி, அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, கலை நிகழ்ச்சிகள் இரவு 9. காரைக்குடி ரயில் நிலையத்தில் ‘ஒரு நிலையம் - ஒரு பொருள்’ விற்பனை அரங்கு திறப்பு விழா: காணொலி வாயிலாக திறந்து வைப்பவா்- பிரதமா் நரேந்திர மோடி, ஏற்பாடு- மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள், காலை 8. காரைக்குடி உள்கோட்ட காவல் துறை, நேஷனல் பயா் சேப்டி கல்லூரி சாா்பில் 53-ஆவது தேசிய பாதுகாப்பு வார விழா, விழிப்புணா்வுப் பேரணி: தலைமை- காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின், முன்னிலை- நேஷனல் கல்விக் குழுமத் தாளாளா் எஸ். சையது, புதிய பேருந்து நிலையம், காலை 8.45.