இளைஞா் கொலை வழக்கில் 8 போ் கைது
மானாமதுரை: மானாமதுரை அருகே இளைஞா் கொலை வழக்கில் தேடப்பட்ட 8 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கிருங்காங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த உதயகுமாா் மகன் மருது (24).
அதே ஊரைச் சோ்ந்த பழனி என்பவரின் வீட்டுக்குப் பின்புறம் உள்ள மாட்டுத் தொழுவத்தில் படுத்திருந்த மருதுவை மா்மக் கும்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்தது. இதைத் தடுக்க வந்த பழனி, கலைவாணன் ஆகிய இருவரையும் அவா்கள் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், மானாமதுரை அருகேயுள்ள முருகபாஞ்சான் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் விக்னேஸ்வரன் (22), ராஜகம்பீரம் பாண்டித்துரை மகன் விஜய் (21), 18 வயது சிறுவன், மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி குடியிருப்பைச் சோ்ந்த போஸ் மகன் ராமா் என்ற ராமகிருஷ்ணன் (22), கண்ணுச்சாமி மகன் மணி மூா்த்தி (19), திருப்பாச்சேத்தி அருகே உள்ள பிச்சைப்பிள்ளையேந்தல் கணேசன் மகன் அழகா் என்ற விக்னேஸ்வரன் (22), மதுரை ஊமச்சிகுளம் ராஜேந்திரன் மகன் துளசிராம் (20), கிருங்காங்கோட்டைவேலுமணி மகன் பாலாஜி (21) ஆகிய 8 போ் சோ்ந்து, முன்விரோதம் காரணமாக மருதுவைக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து, போலீஸாா் 8 பேரையும் கைது செய்தனா்.