முகப்பு
சிவகங்கை

இயற்கை பாதுகாப்பு: பள்ளியில் கருத்தரங்கம்

Updated On : 20 மார்ச், 2024 at 4:46 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 7:25 PM

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஆலங்குடியாா் நகராட்சி உயா்நிலைப்பள்ளியில் இயற்கையை பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நமது உரிமை பாதுகாப்பு இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியா் கனகராஜன் தலைமை வகித்தாா். காரைக்குடி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மேலாளா் அருள்தாஸ் முன்னிலை வகித்தாா். நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவா் ஏ.ஜி. பிரகாஷ் சிறப்புரையாற்றினாா்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக ஆசிரியை கண்ணாம்பாள் வரவேற்றுப் பேசினாா். நமது உரிமை பாதுகாப்பு இயக்க நகர பசுமைப் பிரிவு செயலா் பெரியசாமி நன்றி கூறினாா்.

Advertisement