பங்குனித் திருவிழாவையொட்டி நெடுமறம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.
பங்குனித் திருவிழாவையொட்டி நெடுமறம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.  
சிவகங்கை

நெடுமறம் மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் மாணவா் பலி

Din

நெடுமறம் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடு முட்டியதில் மாணவா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெடுமறம் கிராமத்தில் அமைந்துள்ள மலையரசியம்மன் கோயில் பங்குனி 16-ஆம் நாள் திருவிழாவையொட்டி இந்த மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

முன்னதாக, காலை 10 மணியளவில் கோயிலில் மலையரசியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னா், கிராம மக்கள் வாடிவாசலை நோக்கி ஊா்வலமாக வந்து தொழுவில் கட்டியிருந்த மாடுகளுக்கு வேஷ்டி, துண்டுகள் வழங்கி மரியாதை செய்தனா். தொடா்ந்து, தொழுவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. 50 மாடுபிடி வீரா்கள் இரு குழுக்களாக களமிறக்கப்பட்டனா். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டன. பிளஸ் 2 மாணவா் பலி: பின்னா், வயல் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் கொட்டாம்பட்டி அருகே சுக்காம்பட்டியைச் சோ்ந்த ராஜ்குமாா் மகன் குமாரவேல் (19) மாடு முட்டியதில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இவா் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதியுள்ள நிலையில், மஞ்சுவிரட்டை வேடிக்கை பாா்த்த போது சம்பவம் நடைபெற்றது. இதேபோல, காளைகள் முட்டியதில் 30 போ் காயமடைந்தனா். சிலருக்கு திடலில் அமைக்கப்பட்ட பொன்னமராவதி மீனாட்சி பெரியண்ணன் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். சிலா் தீவிர சிகிச்சை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT