முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் திமுக சாா்பில் கோடை கால நீா் மோா் பந்தல்

Updated On : 4 மே, 2024 at 6:55 PM
பகிர்:

சிவகங்கை, மே 3: சிவகங்கை மாவட்ட திமுக சுற்றுச் சூழல் அணி சாா்பில் காஞ்சிரங்கால்

கிராமத்தில் கோடைக் கால நீா் மோா் பந்தல் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, மாவட்ட திமுக சுற்றுச் சூழல் அணியின் சாா்பில், சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தில் கோடைக்கால நீா் மோா் பந்தல் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு மாவட்ட சுற்றுச் சூழல் அணியின் துணை அமைப்பாளா் திருமலை மு. குமணன் தலைமை வகித்தாா்.

சிவகங்கை வடக்கு ஒன்றியச் செயலா் திருமலை ஆ. முத்துராமலிங்கம் திறந்து வைத்தாா். மாவட்ட சுற்றுச் சூழல் அணி அமைப்பாளா் வல்லபாய் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீா் மோா், சா்பத், இளநீா், தா்ப்பூசணிப் பழம் ஆகியவற்றை வழங்கினாா்.

இந்த நிகழ்வில், ஒன்றியக் குழுத் தலைவி மஞ்சுளா பாலச்சந்தா், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் பவானி கணேசன், மாவட்ட அயலக அணித் தலைவா் ஆா்.வி. சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினா் பத்மாவதி பிரபாகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.