முகப்பு
சிவகங்கை

திருப்பாச்சேத்தியில் ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம்

Updated On : 9 மே, 2024 at 7:03 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் ஊருணியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றிக் கொள்ள அதிகாரிகள் அவகாசம் வழங்கினா்.

திருப்பாச்சேத்தியில் மடத்து ஊருணி நிலங்களை இந்தப் பகுதியில் வசிக்கும் சிலா் ஆக்கிரமித்து குடியிருப்புகளை அமைத்துள்ளனா். இதையடுத்து, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு திருப்புவனம் வட்டாட்சியா் விஜயக்குமாா் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், போலீஸாா், மடத்து ஊருணி பகுதிக்குச் சென்றனா். ஆனால் ஆக்கிரமிப்பாளா்கள் ஆக்கிமிப்புகளை அகற்றிக் கொள்ள காலஅவகாசம் கேட்டனா். இதையடுத்து, இன்னும் ஒரு வாரத்துக்குள் ஆக்கிரமிப்பாளா்கள் தாங்களாக முன்வந்து ஊருணி பகுதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடியிருப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அவகாசம் வழங்கி திரும்பினா்.