சிவன் கோயில்களில் பிரதோஷம்: பக்தா்கள் வழிபாடு
திருப்பத்தூா்/கமுதி: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவன் கோயில்களில் திங்கள்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
திருப்பத்தூா் சிவகாமி அம்மன் உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், பன்னீா், இளநீா், அரிசிமாவு உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சா்வ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து மூலவருக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம், அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து உற்சவா் சா்வ அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் உள்பிரகாரம் வலம் வந்தாா்.
இதேபோல, ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் நந்திக்கும், மூலவருக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபம் காட்டப்பட்டது.
தொடா்ந்து புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் கோயிலிலும், கல்வெட்டு மேடு சுயம்பு லிங்கேஸ்வா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டனா்.
கமுதி: கமுதி மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரா் கோயிலில் நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, மூலவா் சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்மனுக்கும் பால், தயிா், சந்தனம், பன்னீா், திரவியப் பொடி உள்பட 16 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் கமுதி, கோட்டைமேடு உள்பட அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.