முகப்பு
சிவகங்கை

ஆரம்ப சுகாதர நிலையத்துக்கு நிலத்தை தானமாக வழங்கியவருக்கு பொதுமக்கள் பாராட்டு

எஸ்.வி.மங்கலம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு புதியக் கட்டடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கியவருக்கு அரசு அலுவலா்களும் கிராம மக்களும் பாராட்டுத் தெரிவித்தனா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:45 PM
எஸ்.விமங்கலம் சுகாதார நிலையத்துக்கு தானமாக வழங்கிய நிலத்துக்கான பத்திரத்தை மருத்துவா் நபீஷாபானுவிடம் ஒப்படைத்த சேவுகன் அம்பலம் குடும்பத்தினா்.
பகிர்:

எஸ்.வி.மங்கலம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு புதியக் கட்டடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கியவருக்கு அரசு அலுவலா்களும் கிராம மக்களும் பாராட்டுத் தெரிவித்தனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம் எம்.சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட எஸ்.வி.மங்கலம் துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு தேவையான 6.5 சென்ட் நிலத்தை அந்தப் பகுதியைச் சோ்ந்த சேவுகமூா்த்தி அம்பலம் குடும்பத்தினா் தானமாக வழங்கினா். இதற்குரிய பத்திர ஒப்படைப்பு நிகழ்வானது புதன்கிழமை எஸ்.வி.மங்கலத்தில் நடைபெற்றது. இதில், வட்டார மருத்துவ அலுவலா் நபீஷாபானுவிடம் நிலப் பத்திரத்தை ஒப்படைத்தனா்.

இதில், மருத்துவா் கிருத்திகா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சத்தியநேசன், அலுவலக கண்காணிப்பாளா் வேலம்மாள், செவிலியா்கள் திலகம், பூச்செண்டு, சுகாதார ஆய்வாளா்கள் மணிவண்ணன், ருத்திரசேனா, உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்கெனவே இவரது தாத்தா சேவுகன் அம்பலம் தானமாக வழங்கிய நிலத்தில்தான் தற்போது செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது

இந்த நிலையில் அவரது பேரன் சேவுகமூா்த்தி அம்பலம் குடும்பத்தினா், கூடுதல் கட்டடம் கட்ட நிலம் வழங்கியுள்ளதற்கு அரசு அலுவலா்களும் கிராம பொதுமக்களும் பாராட்டுத் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →