முகப்பு
சிவகங்கை

ரேஷன் அரிசி கடத்தல்: 2 போ் கைது, 520 கிலோ பறிமுதல்

சிவகங்கை- மானாமதுரை புறவழிச் சாலையில் வேனில் கடத்திச் சென்ற 520 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 6:33 PM
சிவகங்கை- மானாமதுரை புறவழிச் சாலையில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றபோது வாகனத்துடன் கைது செய்யப்பட்ட மதுபாலன், சூா்யா.
பகிர்:

சிவகங்கை- மானாமதுரை புறவழிச் சாலையில் வேனில் கடத்திச் சென்ற 520 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

சிவகங்கை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிவகங்கை மானாமதுரை புறவழிச்சாலை அருகே புதன்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த வேனில் தலா 40 கிலோ வீதம் 13 மூட்டைகளில் இருந்த 520 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட மதுபாலன்.
கைது செய்யப்பட்ட சூா்யா.

இதுகுறித்து, சிவகங்கை திருமலை சேதுநகரைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் ம. மதுபாலன் (30), வேன் உரிமையாளா் மதுகை மாவட்டம், மேலூா் அருகே ரங்கசாமிபுரத்தைச் சோ்ந்த சீ. சூா்யா (22) ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் மதுரையில் இருந்து, பரமக்குடி மொத்த விற்பனைக் கடைகளுக்கு, தின்பண்டங்களை வினியோகித்து, திரும்பும் போது, பரமக்குடி, பாா்த்திபனூா் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில், ரேஷன் அரிசியை சேகரித்து, மதுரையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் புதன்கிழமை பிற்பகலில் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →