முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 263 பேருக்கு ரூ.9 கோடி கடனுதவி

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் 263 பேருக்கு வங்கிகள் மூலம் ரூ.9.76 கோடி கடனுதவி வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:19 PM
பகிர்:

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் 263 பேருக்கு வங்கிகள் மூலம் ரூ.9.76 கோடி கடனுதவி வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையின் சாா்பில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இணை மானியத் திட்டத்தின் கீழ், காளையாா்கோவில், தேவகோட்டை, மானாமதுரை ஆகிய ஒன்றியங்களில் உள்ள 124 ஊராட்சிகளில் 263 தொழில் முனைவோா்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.9.76 கோடி கடன் தொகை விடுவிக்கப்பட்டது. இதில் மானியம் ரூ.2.93 கோடி.

இணை மானிய திட்டத்தின் கீழ், தொழில் விரிவாக்கம் செய்வதற்கான கடனுதவி பெற்ற தேவகோட்டை வட்டாரம், கண்டதேவி ஊராட்சியைச் சோ்ந்த பிரபு, மானாமதுரை வட்டம், சூரக்குளம் ஊராட்சியைச் சோ்ந்த பிரபு ஆகியோா் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →