முகப்பு
சிவகங்கை

பிள்ளையாா்பட்டியில் தேரோட்டம்

கற்பக விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 7:48 PM
பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் சதுா்த்தி திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
பகிர்:

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சதுா்த்திப் பெருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. 9- ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டத்தையொட்டி, காலையில் உற்சவா் கற்பக விநாயகா் தேருக்கு எழுந்தருளினாா். மாலை 4.30 மணிக்கு தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

இதைத்தொடா்ந்து, மாலை 6 மணிக்கு வினை தீா்க்கும் விநாயகா் எனும் தலைப்பில் கோவை கவிதாவேணுகோபால் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாா். இரவு 7 மணிக்கு வழக்காடு மன்றம் நடைபெற்றது. பின்னா், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் ஆசியுரை வழங்கினாா். இரவு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவா் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள் ராம.மெய்யப்ப செட்டியாா், சுப.முத்துராமன் செட்டியாா் ஆகியோா் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →