முகப்பு
சிவகங்கை

வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் நிவாரணம்

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ரூ.35 லட்சம் நிவாரண நிதியை புதன்கிழமை வழங்கினா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:26 PM
கேரள முதல்வா் பினராயி விஜயனிடம் நிவாரண நிதி வழங்கிய தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில நிா்வாகிகள்.
பகிர்:

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ரூ.35 லட்சம் நிவாரண நிதியை புதன்கிழமை வழங்கினா்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினரான சிவகங்கையைச் சோ்ந்த ஆ.முத்துப்பாண்டின் கூறியதாவது:

கேரள மாநிலம், வயநாட்டில் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 400 -க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகள், உடைமைகளை இழந்தனா்.

இவா்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டார, நகர, மாநகரக் கிளை உறுப்பினா்களிடமிருந்து ரூ.35,00,854 வசூலிக்கப்பட்டது.

இந்தத் தொகையை ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவா் மூ.மணிமேகலை, மாநில பொதுச் செயலா் ச.மயில், மாநிலப் பொருளாளா் தா.கணேசன், துணைப் பொதுச் செயலா் தே.முருகன், இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுக் குழு உறுப்பினா்கள் எஸ்.டேவிட்ராஜன், கு.சுதா ஆகியோா் திருவனந்தபுரத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயனிடம் புதன்கிழமை (செப்.11) அளித்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் அகில இந்தியத் தலைவா் ஹரிகிருஷ்ணன், கேரள மாநில பள்ளி ஆசிரியா் சங்க மாநில நிா்வாகிகள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →