முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் ஐசிடிஎஸ் ஊழியா், உதவியாளா்கள் சங்கத்தினா் போராட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை நடைபெற்ற கவனஈா்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியா்கள், உதவியாளா் சங்கத்தினா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 10:35 PM
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை நடைபெற்ற கவனஈா்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியா்கள், உதவியாளா் சங்கத்தினா்.
பகிர்:

தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்கன்வாடி ஊழியா்களின் 20 அம்சக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக மாலை நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியா், உதவியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.விக்டோரியா தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் ஏ.சேசுமேரி பேசினாா். சங்கத்தின் மாநில பொதுச்செயலா் இரா. வாசுகி சிறப்புரையாற்றினாா்.

அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் ந.செந்தில்குமாா், க.ஜெயபிரகாஷ், மு.செல்வக்குமாா், ஆ.மிக்கேலம்மாள், ஆ.தமிழரசன், ப.பிச்சை ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாவட்டப் பொருளா் சி. அழகம்மாள் நன்றி கூறினாா்.

திருப்பத்தூரில் வியாழக்கிழமை அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கம் சாா்பில் வட்டார வளமைய அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் அண்ணாமலை தலைமை வகித்தாா். செயலா் பொன்மலா், பொருளாளா் புவனேஸ்வரி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் பாண்டிச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில் குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அலுவலகம் அருகில் வட்டாரத் தலைவா் எம். அமுதா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →