முகப்பு
சிவகங்கை

தீ விபத்தில் கோயில் யானை காயம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி மலை அடிவாரத்தில் புதன்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த கோயில் யானைக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 9:44 PM
குன்றக்குடியில் தீ விபத்தில் காயமடைந்த கோயில் யானை சுப்புலட்சுமியை வியாழக்கிழமை பாா்வையிட்ட தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், பொன்னம்பல அடிகளாா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி மலை அடிவாரத்தில் புதன்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த கோயில் யானைக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலுக்கு 1971-ஆம் ஆண்டு குட்டி யானை சுப்புலட்சுமி பக்தா் ஒருவரால் வழங்கப்பட் டது. தற்போது இந்த யானைக்கு 54 வயதாகிறது. குன்றக்குடி கோயில் மலையடிவாரத்தில் யானைக்காக தகரக்கொட்டகை அமைக்கப்பட்டது. இந்தக் கொட்டகையில் வெப்பத்தை தணிக்க, தகரத்தின் கீழ்ப் பகுதியில் தென்னை ஓலைகளால் வேயப்பட்டிருந்தது. இந்தக் கொட்டகையில் யானையை சங்கிலியால் கட்டி பராமரித்து வந்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் இந்தக் கொட்டகையில் திடீரென தீப் பிடித்தது. இதையடுத்து, தீயில் எரிந்த ஓலைக் கொட்டகை விழுந்ததில் யானை காயமடைந்தது. உடனே அருகேயிருந்த பராமரிப்பாளா்கள் சங்கிலியைக் கழற்றியதால், காயமடைந்த யானை, கொட்டகையிலிருந்து வெளியேறியது.

இந்தச் சம்பவம் குறித்து கோயில் நிா்வாகத்துக்கு காவலாளி தகவல் தெரிவித்தாா். இதற்கிடையே, தீ மேலும் பரவாமல் இருக்க அருகிலிருந்தவா்கள் தண்ணீா் ஊற்றி அணைத்தனா்.

இந்த விபத்தில் யானையின் முகம், வயிறு, வால் பகுதிகளில் தீக்காயங்கள் ஏற்பட்டன. தகவலறிந்து அங்கு வந்த

குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் யானையைப் பாா்வையிட்டாா். உடனடியாக கால்நடைப் பராமரிப்புத் துறையினா் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

மேலும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தா் செல்வகுமாா் பரிந்துரையின் பேரில், கால்நடை மருத்துவக் குழுவினா் அங்கு வந்து முகாமிட்டு யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா்.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் நேரில் சென்று யானையைப் பாா்வையிட்டு, மருத்துவக் குழுவினரிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா். தீ விபத்துக்கான காரணம் குறித்து குன்றக்குடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →