முகப்பு
சிவகங்கை

93 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சிவகங்கையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சாா்பில் 93 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்தில் புதன்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 9:38 PM
சிவகங்கை நேரு கடைவீதி பகுதியில் டாம்கோ கடன் திட்டங்களின் கீழ் சிறுதொழில்களுக்கான கடனுதவி பெற்று, பயன்பெற்று வரும் பயனாளிகளை நேரில் சந்தித்து, திட்டப் பயன்கள் குறித்து கேட்டறிந்த டாம்கோ தலைவா் சி. பொ்னாண்டஸ் ரத்தின ராஜா.
பகிர்:

சிவகங்கையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சாா்பில் 93 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்தில் புதன்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமை வகித்தாா். காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவா் சி.பொ்னாண்டஸ் ரத்தின ராஜா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ) மூலம் நிகழாண்டில் ரூ.100 கோடி வரை வங்கிக் கடனுதவிகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. சிறுபான்மையினரிடையே டாம்கோ கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு குறைவாகவே உள்ளது. சிறுபான்மையினா் நலவாரியத்தில் உறுப்பினா்களாக பதிவு செய்வதன் மூலம் அரசின் திட்டங்களை எளிதில் பெறமுடியும்.

இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் சிறுபான்மையினா் அமைப்புகளைச் சாா்ந்தவா்களின் பல்வேறு கருத்துகள், கோரிக்கைகள் பெறப்பட் டுள்ளன. இந்தக் கோரிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தின் வாயிலாக பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா். இதில், மொத்தம் 93 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, இணைப்பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேந்திர பிரசாத், மேலாண் இயக்குநா் (மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) உமா மகேஸ்வரி, மகளிா் திட்ட இயக்குநா் கவிதப்பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் ஜெயமணி, சிறுபான்மையினா் நலப் பிரிவு அமைப்புகளைச் சாா்ந்த தலைவா்கள், பிரதிநிதிகள், பயனாளிகள், அரசுஅலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →