முகப்பு
சிவகங்கை

அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மாட்டத் தலைமை மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தாா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 8:15 PM
மானாமதுரை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு செய்தபோது, சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளியிடம் குறைகளைக் கேட்டறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மாட்டத் தலைமை மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தாா்.

மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருவதாக புகாா் எழுந்தது. இந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் அங்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினாா். அங்கு சிகிச்சை பெற காத்திருந்த நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, இந்த மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் நியமிக்கவும் தேவையான வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவா்கள் கேட்டுக் கொண்டனா். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா்.

மானாமதுரை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு செய்தபோது, சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளியிடம் குறைகளைக் கேட்டறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா்.
மானாமதுரை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு செய்தபோது, சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளியிடம் குறைகளைக் கேட்டறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா்.

திமுக நகரச் செயலரும், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவருமான கே.பொன்னுச்சாமி, நகா் அவைத் தலைவா் ரவிச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் ஜி. மயில்வாகனன் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →