முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் தயாா் நிலையில் வெள்ள மீட்பு உபகரணங்கள்

வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்வதற்காக வெள்ள மீட்பு உபகரணங்களை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை தரப் பரிசோதனை செய்தனா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 7:25 PM
பகிர்:

வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்வதற்காக வெள்ள மீட்பு உபகரணங்களை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை தரப் பரிசோதனை செய்தனா்.

நிகழாண்டு வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்வதற்கேற்ப தீயணைப்பு, மீட்புப் பணி நிலையங்களில் பயன்பாட்டில் உள்ள வெள்ள மீட்புப் பணி உபகரணங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதன்படி, தீயணைப்பு, மீப்புப் பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலா் சு.செந்தில்குமாா் தலைமையில், சிறப்பு நிலைய அலுவலா் மு.அண்ணாமலை முன்னிலையில் மீட்பு உபகரணங்கள் தரப் பரிசோதனை செய்யப்பட்டன.

ரப்பா் மோட்டாா் படகு, அஸ்கா லைட், லைப் பாய், லைப் ஜாக்கெட், அனைத்து விதமான ஏணிகள்,

கயிறுகள், சுவாசக் கருவிகள், கான்கிரீட் கட்டா்கள் உள்ளிட்ட கருவிகளின் செயல்பாடுகள் தீயணைப்பு வீரா்களால் ஒத்திகை பாா்க்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →