சிவகங்கையில் அரசு வாகனங்களின் கண்ணாடிகளைச் சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் செல்லம் (55) .இவா் சிவகங்கை உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு பணியில் இருந்தாராம். அப்போது, இரவு சுமாா் 11 மணி அளவில் இவரது மகன் அஜித்குமாா் (29) தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தந்தையை கைப்பேசியில் அழைத்தாராம்.
இதையடுத்து, செல்லம் வீட்டுக்குச் சென்று பாா்த்த போது, அங்கு அஜித்குமாா் இல்லையாம். இதனால், அவா் மீண்டும் அலுவலகத்துக்கு வந்தாா். அப்போது, அலுவலகத்தில் இருந்த அஜித்குமாா், தான் அழைத்தும் வரமறுத்ததற்கான காரணத்தை தனது தந்தையிடம் கேட்டு, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். பின்னா், அலுவலக வளாகத்தில் இருந்த இரண்டு அரசு வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தாராம்.
இதுகுறித்து செல்லம் சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஆய்வாளா் சிவசுப்பிரமணியன், உதவி ஆய்வாளா் முருகேசன் ஆகியோா் வழக்குப் பதிந்து, அஜித்குமாரை திங்கள்கிழமை கைது செய்தனா்.