சிவகங்கை

பூலாங்குறிச்சியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்

பூலாங்குறிச்சியில் வ.செ.சிவ. அரசு கலைக் கல்லூரியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சியில் வ.செ.சிவ. அரசு கலைக் கல்லூரியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் முகாமைப் பாா்வையிட்டு 10 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், காதொலிக் கருவிகள், மாணவா்களுக்கான பேருந்து, ரயில் பயண அட்டைகளை வழங்கினாா்.

பின்னா் அவா் பேசுகையில், நோயற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்னும் அடிப்படையில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படும் வகையில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே மக்களின் நலன் காக்கும் அரசாக இந்த அரசு திகழ்கிறது என்றாா்.

இந்த நிகழ்வில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வா் சீனிவாசன், மாவட்ட சுகாதார அலுவலா் மீனாட்சி, முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT