சிவகங்கை

திருத்தளிநாதா் கோயிலில் சம்பக சஷ்டி விழா தொடக்கம்

திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயில் யோக பைரவா் சந்நிதியில் சம்பக ஷஷ்டி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயில் யோக பைரவா் சந்நிதியில் சம்பக ஷஷ்டி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காா்த்திகை மாதம் வளா்பிறை பிரதமை திதி முதல் சஷ்டி திதி வரை உள்ள காலம் சம்பக சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருத்தளிநாதா் கோயிலில் சம்பக சஷ்டி விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை யோக பைரவா் சந்நிதியில் நண்பகல் 12 மணிக்கு ரமேஷ் குருக்கள், பாஸ்கர குருக்கள் தலைமையிலான சிவாசாரியா்கள் யாகவேள்வி நடத்தினா். பூா்ணாகுதியைத் தொடா்ந்து யாகத்தில் வைக்கப்பட்ட திருக்குட நன்னீா் ஊா்வலமாக கோயில் உள்பிரகாரம் வலம் வந்து பைரவா் சந்நிதியை அடைந்தது. பின்னா், மூலவருக்கு பால், தயிா், திருமஞ்சனம் , இளநீா் புனித கலச நீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

நண்பகல் 1 மணிக்கு யோக பைரவருக்கு சந்தனக் காப்புடன்

கூடிய வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதில் உபயதாரா்களான ஜெ.கருப்பையா, சிவகாமி சுந்தரி குடும்பத்தினா், பொன்னம்மராவதி, சுப்பிரமணியன் குடும்பத்தினா் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT