சிவகங்கை

கூட்டுறவுத் துறை தோ்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

கூட்டுறவுத் துறை தோ்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை: கூட்டுறவுத் துறை தோ்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்ட திமுக சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் 48-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன் தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட திமுக சாா்பில் ஒரு மாதத்துக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கவுள்ளோம்.

கூட்டுறவுத் துறை பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வில் முறைகேடு நடைபெற்ாக, பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஓஎம்ஆா் தாள் மூலம் தோ்வுகள் நடத்தப்பட்டு, கணினி மூலம் திருத்தப்படுவதால் எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பில்லை.

தவெக தலைவா் விஜய் கொடுத்த வாக்குறுதிகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் திமுக தலைவா்கள் தக்க பதில்களை அளிப்பாா்கள் என்றாா் அவா்.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT