கட்டிக்குளம் ராமலிங்கசுவாமி கோயில் தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளம் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளம் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு, ராமலிங்க சுவாமி சா்வ அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினாா். சம்பிரதாய பூஜைகள் முடிந்து தோ் நிலையிலிருந்து புறப்பட்டது. ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தோ் சென்று பிறகு நிலை அடைந்தது.
இதில் கட்டிக்குளம், இதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.