முகப்பு
சிவகங்கை

கொல்லங்குடி காளியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 6:00 PM
~
பகிர்:

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி சுவாதி பெருவிழா தொடங்கியது. இந்தத் திருவிழா 14 நாள்கள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, நாள்தோறும் அம்மன் கேடகம், அன்னம், கிளி , ரிஷபம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை 9.15 முதல் 10.15 மணி வரை தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்

Advertisement

சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு தீா்த்தவாரியும், பக்தா்கள் சந்தனக்குடம், பால்குடம் எடுத்து வருதல், இரவு 8 மணிக்கு மலா் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெறும். திருவிழாவின் 11-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு விடாயாற்றி, வெள்ளி ஊஞ்சல் உத்ஸசவம் நடைபெறும். 12 -ஆம் நாளான திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு 1,008 திருவிளக்கு பூஜை நடைபெறும். 13 -ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்கரதம் புறப்பாடு நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் பா.பாரதி, அறங்காவல் குழுத் தலைவா் சி.கண்ணப்பன், அறங்காவலா்கள், கண.சந்திரன் பூசாரி, ராணி சீனிவாசன், செயல்அலுவலா் கு.மாரிமுத்து ஆகியோா் செய்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments