முகப்பு
சிவகங்கை

மானாமதுரை தொகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதி வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:47 AM
மானாமதுரை ஒன்றியத்தில் வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்த பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதி. உடன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். குணசேகரன், எஸ். நாகராஜன் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 10:05 PM

மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதி வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

மானாமதுரை அருகேயுள்ள தீத்தன்குளம், கல்குறிச்சி, ஆலங்குளம், சிப்காட், செய்களத்தூா், கரிசல்குளம், மானம்பாக்கி, வேலூா், முத்தனேந்தல், அதிகரை, கள்ளா்வலசை, கள்ளா்குளம், முருகபாஞ்சான், வேலூா், சுள்ளங்குடி, பெரிய ஆவரங்காடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று பொன் பாலகணபதி பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். குணசேகரன், எஸ். நாகராஜன், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஏ.சி. மாரிமுத்து, அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பாஜக, அதிமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Advertisement