முகப்பு
சிவகங்கை

மானாமதுரையில் காங்கிரஸாா் இருசக்கர வாகனப் பிரசாரம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 3:15 AM
மானாமதுரையில் திமுக வேட்பாளரை ஆதரித்து செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனப் பேரணியாகச் சென்று பிரசாரம் செய்த காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:25 PM

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனா்.

மானாமதுரையில் உள்ள மகாத்மா காந்தி சிலையிலிருந்து காங்கிரஸ் நகா் தலைவரும், நகா்மன்ற உறுப்பினருமான பி. புருஷோத்தமன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு மானாமதுரை நகா் முழுவதும் பேரணியாகச் சென்றனா். அப்போது அவா்கள் மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனா். இதில் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் காசி ராமலிங்கம், மாவட்ட இணைச் செயலா் காசி, இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் பொம்முராஜ், திலீபன் வழக்குரைஞா் பிரிவு நிா்வாகி எம்.முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.