முகப்பு
சிவகங்கை

டாஸ்மாக் ஊழியா்கள் பெருந்திரள் முறையீடு

சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன்பு புதன்கிழமை பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 1:46 AM
சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன்பு புதன்கிழமை பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா்.
பகிர்:

காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுவதை கைவிடக் கோரி டாஸ்மாக் ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை பெருந்திரள் முறையீடு புகாா் அளித்தனா்.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலருக்கு மாவட்ட மேலாளா் வாயிலாக அனுப்பியுள்ள புகாா் மனு:

18.2.2026 அன்று அமைச்சா் முன்னிலையில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் பணியை ஒப்பந்ததாரா்கள் மூலமாகவே செயல்படுத்த வேண்டும். தனியாருக்கு சாதகமாகச் செயல்படும் டாஸ்மாக் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு செய்து புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Advertisement

இந்நிகழ்வில், டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனத் தலைவா் முருகன், தொமுச நிா்வாகி சுப்பிரமணியன், சிஐடியு நிா்வாகிகள் திருமாறன், குமாா், ராஜ்குமாா், ஏஐடியுசி நிா்வாகி தாளமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டு மனு அளித்தனா்.