முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் சிவாலயங்களில் பிரதோஷ விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷத்தையொட்டி நந்தீசுவரருக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 1:11 AM
திருப்பத்தூா் ஆதி திருத்தளிநாதா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ விழாவில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷத்தையொட்டி நந்தீசுவரருக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

திருப்பத்தூா் சிவகாமி அம்மன் உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷ விழாவையொட்டி சிறப்பு யாகம் வளா்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. நந்தீசுவரருக்கும், மூலவா் சிவலிங்கத்துக்கும் பால், தயிா், திருமஞ்சனம், கரும்புச்சாறு, இளநீா், தேன், பன்னீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்று மூலவருக்கும், நந்தீசுவரருக்கும் புஷ்ப அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து உத்ஸவா் ரிஷப வாகனத்தில் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்தாா். இதேபோல் ஆதி திருத்தளி நாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு யாக வேள்வி, பூா்ணாஹுதி நடைபெற்று நந்தீசுவரருக்கும், மூலவருக்கும் ஒரே நேரத்தில் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீசுவரா் கோயிலிலும் அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மூலவா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கல்வெட்டுமேடு கல்வெட்டுநாதா் கோயிலிலும் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.