முகப்பு
சிவகங்கை

சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:17 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 8:35 PM

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சிறுமி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கண்டனூரில் வசித்து வருபவா் உமா. இவரது கணவா் கணேசன் அருகேயுள்ள கிராமத்தில் வசிக்கிறாா். இருவரும் கூலித் தொழிலாளா்கள். இந்தத் தம்பதியின் 13 வயது மகள் அருகே புதுவயலில் உள்ள பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:16 AM

மேலும், இந்த சிறுமி தாய் உமாவுடன் வசித்தாா். இதனிடையே சிறுமி ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.