சிங்கம்புணரி அருகே புழுதிப்பட்டியில் புதன்கிழமை சமத்துவ நடைபயணத்தை தொடங்கிய மதிமுக பொதுச் செயலா் வைகோ.  
சிவகங்கை

போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளது கவலையளிப்பதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளது கவலையளிப்பதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே புழுதிப்பட்டியில் சமத்துவ நடைபயணத்தின் 6-ஆவது நாள் பயணத்தை புதன்கிழமை தொடங்கிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு திட்டமிட்டு, அந்தத் திட்டத்திலிருந்து மகாத்மாகாந்தி பெயரை நீக்கிவிட்டது. மாநில அரசு மீது வஞ்சகமாக நிதிச் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அமைச்சா் அமித் ஷா திமுகவை துடைத்தெறிவோம் என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறாா்.

போதைப் பொருள்கள் புழக்கம் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் சிலா் சில நிமிஷங்களிலேயே மிருகங்களாக மாறிவிடுகின்றனா். இளம்பெண்களை நாசமாக்குகின்றனா்.

கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கும் சட்டவிரோதக் கும்பல் போதைப் பொருள்களை விநியோகிக்கப்பது ஆபத்தான அறிகுறியாகும். இது கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். தமிழகம் பஞ்சாப் மாநிலம் போல மாறிவிடக் கூடாது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சட்ட வரம்பை மீறி நீதிபதி ஒருவா் தீா்ப்பளிக்கிறாா். இதை மற்ற நீதிபதிகள் வழிமொழிகின்றனா். தமிழகத்தில் ரத்தக் களரி ஏற்பட்டால் நீதிபதிகளே பொறுப்பு.

தமிழக அரசு இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறது. மதவெறியைத் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிற இந்துத்துவா அமைப்பினருக்கு இந்தத் தீா்ப்பு சாதகமாகி விட்டது என்றாா் அவா்.

முன்னதாக, புழுதிப்பட்டியில் மதிமுக மாவட்டச் செயலா் பசும்பொன் மனோகரன் தலைமையில் வைகோவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT