சிவகங்கை

வீட்டின் ஓட்டைப் பிரித்து 18 பவுன் நகைகள் திருட்டு

சிங்கம்புணரி அருகே வேங்கைப்பட்டியில் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கிய மா்ம நபா்கள் 18 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.

Syndication

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வேங்கைப்பட்டியில் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கிய மா்ம நபா்கள் 18 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.

சிங்கம்புணரி அருகேயுள்ள வேங்கைப்பட்டியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (48). இவா் குடும்பத்துடன் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய கடந்த சனிக்கிழமை சென்றாா்.

இந்த நிலையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மா்ம நபா்கள் வீட்டின் மேற்கூரை ஒட்டைப் பிரித்து உள்ளே இறங்கி 18 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.

சண்முகசுந்தரம் குடும்பத்தினா் திருப்பதியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை வீடு திரும்பினா்.

இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது, பீரோக்களில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சிங்கம்புணரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஜன.21 இல் சாலை மறியல் போராட்டம்

வெனிசுலா அதிபர் மடூரோவை அமெரிக்கா சிறைபிடித்தது சரியா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சாகுபடி மட்டுமே சாதனையல்ல!

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

மின் கம்பியை மிதித்த மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT