சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்குப் பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஞானசேகரன் சுவாமிகள் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமிகளின் அதிஷ்டானத்துக்கு 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி, பல வகை மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, கைலாய வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், திருமுறை விண்ணப்பம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோா் பங்கேற்று ஞானசேகரன் சுவாமிகளை
தரிசித்தனா். மதியம் மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் நடைபெற்றது.