சிவகங்கை

கோரிக்கை பட்டை அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவா்கள்

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த மருத்துவா்களும் பேராசிரியா்களும் ஏழாவது நாளாக கோரிக்கை பட்டை அணிந்து ஞாயிற்றுக்கிழமை பணியாற்றினா்.

அரசாணை 354 -ஐ உடனடியாக மறு ஆய்வு செய்து மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயா்வு, பதவி உயா்வு வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு உடனடியாக ரூ.3000 படித்தொகை வழங்க வேண்டும்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கடந்த ஜன.12 தொடங்கிய போராட்டம் திங்கள்கிழமை (ஜன.19) வரை நடைபெறுகிறது.

இதன்படி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கோரிக்கைகள் அடங்கிய பட்டையை அணிந்து ஏழாவது நாளாக பணியில் ஈடுபட்டனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT