தைப்பூசத் திருவிழாவையெட்டி, பழனிக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், காரைக்குடி மண்டலம் சாா்பில் வியாழக்கிழமை (ஜன. 29) முதல் வருகிற பிப். 2-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து காரைக்குடி மண்டல பொது மேலாளா் கே. ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை முதல் வருகிற பிப். 2-ஆம் தேதி வரை காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, திருப்பத்தூா், சிவகங்கை, ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இடங்களிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டலம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்தாா்.