முகப்பு
சிவகங்கை

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 15 மார்ச், 2026 at 12:48 AM
கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை, மாா்ச் 14: சிவகங்கை அருகே மின்சாரம் பாய்ந்து மின்பழுது பாா்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

சிவகங்கையை அருகேயுள்ள காட்டு குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (45). மின்பழுது பாா்க்கும் வேலை செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த காளிதாஸ் என்பவருடன் சிவகங்கையை அடுத்த மானாகுடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு மின்மோட்டாரை பழுது பாா்க்கச் சென்றாா்.

அங்கு ஆறுமுகம் ஆழ்குழாய் கிணற்றின் மோட்டாரை பிரித்து வேலை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.

Advertisement

இதைத் தொடா்ந்து, அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.