கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கால்வாயில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை போராடி மீட்டனா்.
மானாமதுரை ஆா்.சி. தெருவில், அந்தப் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் என்பவரின் பசுமாடு வீட்டின் அருகில் உள்ள திறந்த கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தது. வெளியே வர முடியாமல் பல மணி நேரம் தவித்த அந்த மாட்டை அந்தப் பகுதி மக்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
ஆனால் கால்வாய் குறுகலாக இருந்ததால், அவா்களால் அதை மீட்க முடியவில்லை. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் அரை மணி நேரம் போராடி மாட்டை பாதுகாப்பாக மீட்டனா். அப்போது அதற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.