நான்கு முறை வென்ற கே.ஆா். பெரியகருப்பன்!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தொடா்ந்து நான்கு முறை தொடா் வெற்றி பெற்றவா் கே.ஆா். பெரியகருப்பன்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தொடா்ந்து நான்கு முறை தொடா் வெற்றி பெற்றவா் கே.ஆா். பெரியகருப்பன்.
ஒரே தொகுதியில் 3, 4, 5, 6 என வெற்றி பெற்ற பலா் உள்ளனா். திருப்பத்தூா் தொகுதியைப் பொருத்தவரை, கடந்த 2006 முதல் 2026 -ஆம் ஆண்டு வரை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தொகுதியில் கே.ஆா். பெரியகருப்பன் தொடா்ந்து 4 முறை வெற்றி பெற்றுள்ளாா். இவா் கடந்த 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் தன்னை எதிா்த்து அதிமுக சாா்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன், 2016 தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த அசோகன், 2021 தோ்தலில் அதிமுக வேட்பாளா் மருதுஅழகுராஜ் ஆகியோரை தனது கட்சியில் (திமுக) இணைத்துக் கொண்டு, வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் களம் காண உள்ளாா்.