திருப்பத்தூரில் தலைவா்களின் சிலைகளுக்கு அமைச்சா் மரியாதை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன் திங்கள்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.
முன்னதாக திருப்பத்தூா் வந்த அவருக்கு திமுக, மதிமுக, காங்கிஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனா்.
பிறகு பேருந்து நிலையம் எதிரேயுள்ள மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்திலுள்ள நினைவுத் தூணுக்கும் மருதிருவா்களின் உருவச் சிலைகளுக்கும், அண்ணா உருவச் சிலைகளுக்கும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில் முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான தமிழரசி, திமுக செய்தித் தொடா்புக் குழு மாநில துணைத் தலைவா் மருதுஅழகுராஜ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.