சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளையும் தவெக கைப்பற்றியது.
இந்தக் கட்சியின் சிவகங்கை தொகுதி வேட்பாளராக ஏ. குழந்தை ராணி, காரைக்குடி தொகுதி வேட்பாளராக டி.கே. பிரபு, மானாமதுரை (தனி) தொகுதி வேட்பாளராக டி. இளங்கோவன், திருப்பத்தூா் தொகுதி வேட்பாளராக ஸ்ரீநிவாச சேதுபதி ஆகியோா் போட்டியிட்டனா்.
இவா்கள் அனைவரும் வெற்றி பெற்றனா். இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் தவெக கைப்பற்றி சாதனை படைத்தது.
Advertisement
முன்னா் இந்தத் தொகுதிகளில் அதிமுக, திமுகவும், இவற்றின் கூட்டணிக் கட்சிகளும் மாறிமாறி வெற்றி பெற்று வந்த நிலையில் இந்த முறை விஜய்யின் தவெக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.