முகப்பு
சிவகங்கை

கட்டுக்குடிபட்டியில் மஞ்சுவிரட்டு

எஸ். புதூா் அருகே உள்ள கட்டுக்குடிபட்டி செல்வ விநாயகா், மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 மே 2026, 3:09 am IST
கட்டுக்குடிபட்டி செல்வ விநாயகா், மகா மாரியம்மன் கோயில் திருவிழா மஞ்சுவிரட்டில் செவ்வாய்க்கிழமை சீறிப்பாய்ந்த காளையை அடக்கிய வீரா்கள்.
பகிர்:

எஸ். புதூா் அருகே உள்ள கட்டுக்குடிபட்டி செல்வ விநாயகா், மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போட்டியின் தொடக்கமாக, ஊா் பொதுமக்கள் மேள தாளங்களுடன் கோயில் மாடுகளை வேட்டி, துண்டுகளுடன் மாலை அணிவித்து தொழுவுக்கு அழைத்து வந்தனா். முதலாவதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடா்ந்து பிற மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில், பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் வேஷ்டி, துண்டு பரிசாக வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரா்கள் அணி அணியாக இறங்கி காளைகளை அடக்கினா். இதில் பத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்களுக்கு, முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை, போலீஸாா் செய்திருந்தனா்.